Friday, August 8, 2014

ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு

ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு

திரைப்படம் – ஆண்டவன் கட்டளை
பாடல் – ஆறு மனமே ஆறு
கவிஞர் – கண்ணதாசன்
இசை – M.S.விஸ்வநாதன், திரு.ராமமூர்த்தி
பாடியவர் – T.M.சௌந்தரராஜன்

ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
தேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு   (ஆறு மனமே)

ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார் உள்ளத்தில் உள்ளது அமைதி
இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம் இறைவன் அமைத்த நியதி (ஆறு மனமே)

சொல்லுக்கு செய்கை பொன்னாகும் வரும் இன்பத்தில் துன்பம் பட்டாகும்
இந்த இரண்டு கட்டளை அறிந்த மனதில் எல்லா நன்மையும் உண்டாகும்
உண்மையை சொல்லி நன்மையை செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும்
நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும் (ஆறு மனமே)

உண்மை என்பது அன்பாகும் பெரும் பணிவு என்பது பண்பாகும்
இந்த இரண்டு கட்டளை அறிந்த மனதில் எல்லா நன்மையும் உண்டாகும் (ஆறு மனமே)

ஆசை கோபம் களவு கொள்பவன் பேச தெரிந்த மிருகம்
அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித உருவில் தெய்வம் (ஆறு மனமே)

இதில் மிருகம் என்பது கள்ள மனம் உயர் தெய்வம் என்பது பிள்ளை மனம்
இந்த ஆறு கட்டளை அறிந்த மனது ஆண்டவன் வாழும் வெள்ளை மனம் (ஆறு மனமே)

Sources: http://coffeemasala.blogspot.in

No comments:

Post a Comment

Labels